இராணுவ அதிகாரியின் மனைவியுடன் எனக்கு தொடர்பிருந்ததால் அவரை கொன்றேன்.. இதனை அறிந்திருந்த 25 வயதுடைய இளம்பெண்ணையும் இந்தியாவுக்கு அழைத்து சென்று கொன்றேன் என கைதான பாதாள உலக நபர் தெரிவிப்பு

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 8ஆம் திகதி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின்போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடத்தபட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ‘நிஷங்க’வையே கொலைசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொலை செய்தவரின் மனைவியுடன் தனக்கிருந்த சட்டவிரோதத் தொடர்பே கொலைக்கான காரணம் என சந்தேக நபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
குருவிட்ட பகுதியில் வைத்து குறித்த இராணுவச் அதிகாரியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்ததாகவும், பின்னர் சடலத்தை அப்பகுதியிலுள்ள காணியொன்றில் புதைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் சடலத்தை அங்கிருந்து தோண்டி எடுத்து அருகிலுள்ள ஆற்றில் வீசியதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டிக்காட்டிய இடங்களை நேற்று (25) அதிகாரிகள் ஆய்வு செய்தபோதிலும், இதுவரை சடலம் கண்டெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் நேரடித் தகவல்களை அறிந்திருந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவரையும் சந்தேக நபர் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, அவரது சடலத்தை மறைத்துள்ளதாக விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது



