News
அடுத்த 10 ஆண்டுகளில் கடன் செலுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை – கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு விட்டது ; மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

அடுத்த 10 ஆண்டுகளில் கடன் செலுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு.
வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளின் விசேட சந்திப்பிலேயே, சர்வதேச, இருதரப்பு மற்றும் வர்த்தக பங்காளிகளின் உதவியுடன் இலங்கையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



