News
வேன் ஒன்றில் இளம்பெண்ணை கடத்திச் செல்ல முயன்றவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – பெண் மீட்பு #கொழும்பு

நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் உள்ள சோதனைச் சாவடியின் ஊடாக இளம் பெண்ணைக் கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, பெண்ணை மீட்டுள்ளனர்.
கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து வேனை அப்பகுதியிலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



