News
இலங்கையில் 80 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பமாக உள்ள மின்சார ரயில் திட்டம் தொடர்பான விபரங்கள்

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில் ரூ.80 பில்லியன் மதிப்பீட்டில் மின்சார ரயில் சேவைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட பணிகள் கொழும்பு மருதானை நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஏனைய பிராந்தியங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. மின்சார ரயில் சேவை மூலம் தினசரி பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான போக்குவரத்து வசதியை வழங்குவதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



