News

பால்மா, திரவப் பால் மற்றும் யோகட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்தது

பால்மா, திரவப் பால் மற்றும் யோகட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெளிவுபடுத்தியுள்ளது.



“BREAKING NEWS” என்ற தலைப்பில் போலி தகவல்கள் பகிரப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரசபை, பொதுமக்கள் இவ்வாறான ஆதாரமற்ற செய்திகளை நம்பவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.



உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புவது நுகர்வோர் மத்தியில் வீண் பயத்தையும், சந்தையில் செயற்கையான குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

சந்தையில் பொருட்களுக்கு மேலதிக விலை கோரப்பட்டாலோ அல்லது முறைகேடுகள் நடந்தாலோ, பொதுமக்கள் 1977 என்ற உடனடி உதவி இலக்கத்தைத் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button