News

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து விலகும் என அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து விலகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.



அரச ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல கட்டங்களாக சம்பள உயர்வுகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும் சுமார் 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



முன்னர் 17,000 ரூபாயாக இருந்த அரச சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டில் 40,000 ரூபாயைத் தாண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அதிகபட்ச அளவிலேயே தற்போதைய சம்பளத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டின் இறுதியில் IMF திட்டத்திலிருந்து விலகிய பின்னர் மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button