
மடவளை பஸார் (மடவளை – வத்தேகம பிரதான வீதியில்) அமைந்துள்ள “மஸ்ஜிதுல் கலீலுர் ரஹ்மான் ” பள்ளிவாசல், நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டது.
இப்புனர் நிர்மாண நற்பணிகளில், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 50 வருடங்கள் பழைமை வாய்ந்த இப்பள்ளிவாசல் கட்டிடத்தில் தொழும் இடவசதியை அதிகரிப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கும், பெண்கள் தொழ இடம் ஒன்றை அமைத்தும் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திருப்பணிக்கு சகல விதத்திலும் உதவி புரிந்த நிர்வாக சபை உறுப்பினர்கள், வியாபாரிகள், நலன் விரும்பிகள், ஊர் மக்கள் அனைவருக்கும், இப்பள்ளிவாசல் நம்பிக்கை சபையினர், தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.



