News
நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு 🔸
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த நடவடிக்கையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



