News
போதைப்பொருள் கடத்தல்காரரான (கைது செய்யப்பட்ட) வத்தளை ஷாருக்கானுக்கு சொந்தமான 9 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் தடை செய்யப்பட்டு கையகப்படுத்தப் பட்டன

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் வத்தளை முகமது பதல்டீன் என்ற ஷாருக்கான் என்பவருக்குச் சொந்தமான 9 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் பிரிவின் இணையதள மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு சொத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு கூறுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபராவார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் பெறப்பட்ட 2 சொகுசு வீடுகள் உட்பட ஆறு வீடுகள் மற்றும் ஒரு மோட்டார் வாகனம் உள்ளிட்ட சொத்துக்களே இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன.



