News

திட்வா அனர்த்தத்தால் வீடுகள் சேதமடைந்து வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மாதம் ரூபா 25,000 என்ற அடிப்படையில் வீட்டு வாடகைக் கொடுப்பனவு தொடரும்..

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த சூழலில் தங்கள் வீடுகள் சேதமடைந்ததால், வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டும், வீட்டு வாடகைக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.



இதன்படி, மாதம் ரூபா 25,000 என்ற அடிப்படையில் வீட்டு வாடகைக் கொடுப்பனவை 2026 டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.



அதற்கிணங்க, 2025.12.05 ஆம் திகதி குறிப்பிடப்பட்ட, வரவு-செலவுத்திட்டச் சுற்றறிக்கை இல.08/2025 இன் தொடர் இல.04 இல் பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அனர்த்தத்தினால் வீடுகளை இழந்து வாழ்வதற்கான வீடற்றவர்களுக்கு மாதாந்த வீட்டு வாடகைக் கொடுப்பனவு, அதிகபட்சம் 12 மாதங்களுக்கு மாதமொன்றுக்கு ரூபா 25,000 என குறிப்பிடப்பட்டுள்ளது.



வரவுசெலவுத்திட்டச் சுற்றறிக்கை இல. 08/2025 இன் ஏனைய அனைத்து ஏற்பாடுகளும் மாற்றமின்றி தொடர்ந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button