News
VIDEO > மின்னல் தாக்கியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்து , சகோதரன் காயம் #களுத்துறை

களுத்துறை, அகலவத்தை பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன், அவனது சகோதரனும் கையில் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை 6.15 மணியளவில் மின்னல் தாக்கியதாகக் கூறிய குடும்ப உறுப்பினர்கள், சிறுவன் கட்டிலின் கீழ் தூக்கி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
VIDEO > https://youtu.be/pNtc88xgmP4
அவனை மீட்ட தாய் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மின்னல் தாக்கலில் சிக்கிய சிறுவனின் சகோதரனின் கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.



