News

27 வயது இத்தாலி பெண் எல்ல பகுதியில் உயிரிழப்பு – நண்பருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்று புகைப்படம் எடுக்கும் போது வழுக்கி விழுந்து சோகம்

எல்ல,

கித்தல் எல்ல பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற 27 வயதான இத்தாலிய பெண் ஒருவர், நழுவி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸாரின் கூற்றுப்படி, குறித்த வெளிநாட்டு பெண் தனது நண்பருடன் கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றபோதே நேற்று காலை (24) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த பெண் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது நழுவி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பின்னர் அவர் தெமோதரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்.


இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து எல்ல பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button