News

அரசின் வரிக் கொள்கை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கம் இன்று நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற 6 பேர் கைது

அரசின் வரிக் கொள்கை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கம் இன்று (03) கொழும்பு புறக்கோட்டை பகுதியில் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டப் பேரணி இன்று பிற்பகல் பொரளையிலுள்ள கேம்ப்பெல் பூங்கா அருகிலிருந்து ஆரம்பமானது.



பின்னர் பேரணி பொரளை சந்திப்பிலிருந்து மரதானை வழியாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. அங்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன்போதே சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறி ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button