News
அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்தது ; வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அறிவித்தார்

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், ஒக்டோபர் 13ஆம் திகதி மரண தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை சவூதி உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது அனோஜன் சிவராசாவுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.



