News
அனோஜன் விடயத்தில் இந்த அரசாங்கம் தனது பொறுப்பை மிகச்சரியாக நிறைவேற்றி உள்ளது – ஒரு நாடு என்ற வகையில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் ; மனோ கணேசன்

சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்திருப்பது நாட்டுக்கு நிம்மதியளிப்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சவூதி அரேபியாவுக்கும் அந்நாட்டின் இளவரசர் சல்மானுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசு தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் தமது வேறுபாடுகளைக் கடந்து நம்பிக்கை மற்றும் பிரார்த்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நாடு என்ற வகையில் கிடைத்த முதல் வெற்றி என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்



