News

அனோஜனின் விடுதலை விவகாரத்தில் நானும் நமது குழுவினரும் எங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம் – விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி ; சஜித்

கல்முனையைச் சேர்ந்த பொறியியலாளர் அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்ய அந்நாட்டு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.



இந்த விவகாரத்தில் தாமும் தமது குழுவினரும் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும், மரண தண்டனையை இரத்துச் செய்தமைக்காக சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்துக்கும் அந்நாட்டு மன்னருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button