மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைகளைப் பெற்று வருகிறார் எனவும் உடல்நிலை குறித்த மேலதிகத் தகவல்களை தர முடியாது எனவும் பொதுஜன பெரமுன தெரிவித்தது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்னவின் கூற்றுப்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளைப் பெற்று வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஒருவரின் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிட மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தொடர்புடைய நிபுணர்கள் மட்டுமே அதிகாரம் பெற்றவர்கள் என்றார்.
ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மஹிந்த ராஜபக்ச தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
எனினும், அவரது தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேலதிகத் தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
“மஹிந்த ராஜபக்ச தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதே நான் தற்போது கூறக்கூடிய விடயமாகும். அவரது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்பதால், இப்போதைக்கு என்னால் இந்தத் தகவலை மட்டுமே வெளியிட முடியும்” என்று எதிரிமான்ன குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த மேலதிகத் தகவல்களைத் தொடர்புடைய மருத்துவ வல்லுநர்கள்தான் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



