News

பெளத்த தேரர் ஒருவரை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது காவி உடை அணிந்திருப்பதற்கு அனுமதி அளிக்கும் கட்டளையொன்றை அறிமுகப்படுத்த பரிந்துரை

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.


அதற்கமைய, அக்குழுவின் இடைக்கால அறிக்கையின்படி, சிறையில் அடைக்கப்பட்ட பிக்கு ஒருவரை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது காவி உடை (சீவரம்) அணிந்திருப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சிறைச்சாலை நிலையான கட்டளை 550 இன் கீழ் புதிய கட்டளையொன்றை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

சம்பந்தப்பட்ட பிக்கு எந்தப் பிரிவை (நிக்காய) அல்லது தரப்பைச் சேர்ந்தவரோ, அந்தத் தரப்பினரால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவிக்கும் வரை, சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது காவி உடை அணிந்திருப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button