News
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு வெளியேறிய கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் இணைந்தார்

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர், மீண்டும் போராட்டத்தில் இணைந்துள்ளார்.
குறித்த போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (17) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது



