News

போராட்டத்தைக் கைவிட மாட்டோம் !

கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளுக்காக கோட்டே கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஏற்றுக்கொண்ட பொறுப்பைக் கைவிடாது என அதன் அனுநாயக்க கோடபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டே கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை முன்தினம் (17) கோட்டே ராஜமகா விஹாரையில் கூடியது.

மகா சங்க சபையின் மகாநாயக்க இத்தெபான தம்மாலங்கார மகா நாநாயக்க தேரரின் தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே கோடபிட்டியே ராகுல தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“எங்கள் சங்க சபை கலகொடஅத்தே ஞானசார தேரருக்காக கூடியது. அங்கே பேசப்பட்ட விடயங்களை உடனடியாக ஊடகங்களுக்குக் கூறப்போவதில்லை. அவருக்கும் ஒட்டுமொத்த பிக்குகளுக்கும் ஆதரவாக நாங்கள் நிற்போம். அந்தப் பொறுப்பைக் நாங்கள் கைவிட மாட்டோம்.ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்காகவும், கலாசாரம் மற்றும் நாகரிகத்திற்காகவும் நாங்கள் குரல் கொடுக்கிறோம். எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை. எங்களது சங்க சபை அந்தத் தீர்மானத்தில் தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.”

Recent Articles

Back to top button