அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் இடைநிறுத்தம் – விளக்கம் கோரி கடிதம் அனுப்பிவைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினரான அன்ஃபாஸ் அமல்தீனின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து, 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமையுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்காமலும், அனுமதி பெறாமலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில், 14 நாட்களுக்குள் எழுத்துமூலமான விளக்கத்தைச் சமர்ப்பிக்குமாறு கட்சியின் அரசியல் அதிகார சபை அவரிடம் கோரியுள்ளது.
அவர் சமர்ப்பிக்கும் விளக்கத்தைப் பரிசீலித்து, கட்சியின் அரசியல் அதிகார சபை மேலதிக தீர்மானம் எடுக்கும் வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்



