100 ரூபாய் லஞ்சம் கேட்டுக் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், மேல்மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கணிப்பாளர் (Timekeeper) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (20) நண்பகல் 12.25 மணியளவில், ரத்தோளுகம பேருந்து நிலையத்தில் உள்ள நேரக் கணிப்பாளர் அறையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
188ஆம் இலக்க வழியிலான ரத்தோளுகமவிலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் பேருந்து ஒன்றை, உரிய நேரத்தில் இயக்காமல் தாமதித்து இயக்குவதற்கும், சாதகமான முறையில் பயணத்தை ஆரம்பிக்க அனுமதிப்பதற்கும் பேருந்து ஊழியர் ஒருவரிடம் இருந்து ரூபாய் 100 லஞ்சமாக கேட்டுக் பெற்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.