நான் இன்று மீண்டும் சொல்கிறேன்… கஞ்சா பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் இலங்கையின் அந்நியச் செலாவணியை ஓஹோ என்று அதிகரிக்கும் ; முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே
இலங்கையில் ஏற்றுமதி செய்யும் நோக்கத்திற்காகக் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்னியச் செலாவணியைச் சம்பாதிக்கும் ஒரு வழியாக இந்தத் தொழில்துறையை உயர்த்த முடியும் என்று அவர் நீண்டகாலமாக முன்வைத்துவரும் யோசனையை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இந்த நிலைப்ாட்டை எடுப்பது இது முதல் முறையல்ல. 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கஞ்சா சாகுபடியைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என யோசனை தெரிவித்த அவர், பின்னர் மருத்துவப் பயன்பாட்டிற்காகக் கஞ்சா ஏற்றுமதி செய்வது பற்றியும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவிக்கு மாற்றீடாகக் கஞ்சா சாகுபடியைப் பயன்படுத்துவது பற்றியும் யோசனைகளை முன்வைத்திருந்தார்.
2022 அக்டோபரில் அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கஞ்சாவை ஏற்றுமதி உற்பத்தியாகச் சட்டப்பூர்வமாக்குவது குறித்துக் கண்டறிய நாடாளுமன்றக் குழுவொன்றை நியமித்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



