News

ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது

கலபொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் கொழும்பு விஹாரமஹா  (விஹாரமஹாத்தேவி பூங்காவிற்கு) அருகில் சத்தியாக்கிரகம் ஒன்று நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்
நேற்று (21) இரவு சந்தேகத்திற்குரிய வகையில் அங்குள்ள மைதானத்தில் நடமாடிய நபர் குறித்து, அங்கிருந்த மக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸார் வருகை தந்து அவரைச் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


இதன்போது அவரிடமிருந்து சிறிய அளவிலான இரண்டு கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் குருந்தவத்தை பொலிஸார் அந்த சந்தேகநபரை அழைத்துச் சென்றுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button