News

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் ட்ரான்ஸபோர்மர் ஒன்றில் ஏறி செப்பு கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த இன்று (22) காலை, ஹோமாகம வேகந்த மாவத்தையில் உள்ள மின்மாற்றி (Transformer) ஒன்றில் ஏறி, அதில் இருந்த செப்பு கம்பிகளை வெட்ட முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த நபர் தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button