News

இஸ்ரேலிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அங்கு ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலிய பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் போராட்டம் நேற்று (24) டெல் அவிவ் நகரில் நடைபெற்றுள்ளது.



2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் குழுக்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.



அன்றைய தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த பணயக்கைதிகளை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை தொடர்பாக பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர். இஸ்ரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, அந்நாட்டின் நான்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் முன்னணியில் இருந்துள்ளனர்.



இஸ்ரேலியத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவுடன் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ள முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button