🇮🇱 இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் மிக சமீபத்திய தகவல்களின் படி…

🇮🇱 இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் மிக சமீபத்திய தகவல்களின் படி…
சமீபத்திய முடிவுகளின்படி, எதிர்க்கட்சி முகாம் பெற்றுள்ள 49 இடங்களோடு ஒப்பிடும்போது, நெதன்யாகுவின் கட்சி 55 இடங்களைப் பெற்று சற்று முன்னிலையில் உள்ளது.
இருப்பினும், இது மிகவும் நெருக்கமான மற்றும் தெளிவற்ற முடிவைக் கொண்ட ஒரு தேர்தலாகும்.
எந்தவொரு கட்சியாலும் ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்களைப் பெற முடியவில்லை.
இதேவேளை இஸ்ரேல் அரபு கட்சிகள் (Arab parties) ஆட்சி அமைப்பதில் முக்கிய திருப்புமுனையாகவும் ‘கிங்மேக்கர்களாகவும்’ (Kingmakers) மாற வாய்ப்புள்ளது – இக்கட்சியினர் 15 முதல் 19 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எக்கட்சியும் பெரும்பான்மை பெறாத போது ஒரு முகாமில் உள்ள உறுப்பினர்கள் யாராவது மற்றொன்றிற்கு மாறுவார்களா, அரசாங்கத்தை அமைக்க அரசியல்வாதிகள் முகாம்களை மாற்றுவார்களா என்ற பெரிய விவாதம் நடந்து வருகிறது.
அரசியல் ஸ்திரமின்மை ஏற்படும் பட்சத்தில், தெளிவான முடிவைப் பெற மற்றொரு தேர்தல் நடத்தப்படலாம் என்ற சாத்தியக்கூறையும் இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிடுகின்றன.
அவ்வாறு நடந்தால், நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகப் பதவியில் நீடிக்கக் கூடும். ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள எவரும் இதை விரும்பவில்லை.
இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் 650,000 வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளன. எனவே அதனுடைய முடிவு எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருப்பினும், வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது வாக்குக் கணிப்புகள் பெரும்பாலும் துல்லியமாகவே இருந்துள்ளன.



