News

ஞானசார தேரருக்காக

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்னால் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பாக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.



குறித்த நீதிமன்ற உத்தரவைச் செல்லுபடியற்றதாக்கும் வகையில் உத்தரவிடுமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், கொழும்பு நீதிவான் உள்ளிட்ட பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button