News

இன்று எரிபொருள் விலை திருத்தம்.. நல்ல செய்தி அல்ல..

அரசின் மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் வழக்கமான விலை திருத்தம் இன்று (31) நள்ளிரவு அறிவிக்கப்படவுள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இம்முறை உள்நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கனித்தெண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் (CPC) ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்படும். அதற்கு இணையாக, இலங்கை ஐ.ஓ.சி (IOC) மற்றும் சினோபெக் (Sinopec) உள்ளிட்ட இலங்கையில் செயற்படும் ஏனைய தனியார் எரிபொருள் நிறுவனங்களும் தமது விலைகளை அதற்கேற்ப திருியமைக்கவுள்ளன.

கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சில உயர்வான போக்கு காணப்பட்டது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட பிரதான கடல்சார் வர்த்தக பாதைகளில் தோன்றியுள்ள ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது.

இந்த இறக்குமதிச் செலவு அதிகரிப்பு, கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் உயர்வு ஆகியவை உள்நாட்டு சில்லறை எரிபொருள் விலைகளை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இம்முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படலாம் என எரிசக்தி துறை ஆய்வாளர்கள் எதிர்வுகூறுகின்றனர்.

எனினும், அமெரிக்க டலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு ஸ்திரமான மட்டத்தில் பேணப்படுவதன் காரணமாக, உலகளாவிய விலை உயர்வின் தாக்கத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறைத்துக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Articles

Back to top button