News

எரிபொருள் விலை குறைகிறது…
இது ஐக்கிய அரபு அமீரகத்தில் 🇦🇪

எரிபொருள் விலை குறைகிறது…
இது ஐக்கிய அரபு அமீரகத்தில் 🇦🇪

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் எரிபொருள் விலை உயர்ந்து வந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 2026 நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கான குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக திருத்தப்பட்ட கட்டணத்தின்படி, சூப்பர் 98 (Super 98) ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு அக்டோபரில் 4.40 AED ஆக இருந்த நிலையில், 0.24 AED குறைக்கப்பட்டு நவம்பரில் 4.16 AED (சுமார் ரூ. 376) ஆக விற்கப்படும்.

ஸ்பெஷல் 95 (Special 95) ரக பெட்ரோலின் விலையும் 0.24 AED குறைந்து, லிட்டருக்கு 4.28 AED இல் இருந்து 4.04 AED (சுமார் ரூ. 366) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஈ-பிளஸ் 91 (E-Plus 91) ரக பெட்ரோல் லிட்டருக்கு 4.21 AED இல் இருந்து 0.24 AED குறைப்பட்டு, 3.97 AED (சுமார் ரூ. 359) என்ற விலையில் விற்பனையாகும்.

டீசல் விலையிலும் சிறிதளவு குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி டீசல் லிட்டர் ஒன்றுக்கு 4.80 AED இல் இருந்து 4.75 AED (சுமார் ரூ. 430) ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தங்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் அமலுக்கு வருகின்றன.

பெட்ரோல் விலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 5.5% முதல் 5.7% வரையிலும், டீசல் விலையில் சுமார் 1% அளவிலும் இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்ட மாறுதல்களால், அமீரகத்தில் கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த விலை குறைப்பு வந்துள்ளது.

சர்வதேச எரிசக்தி சந்தையின் நிலவரங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிபொருள் விலைகளை ஐக்கிய அரபு அமீரகம் மாதந்தோறும் பரிசீலித்து திருத்தி அமைத்து வருகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button