News
ஜனாதிபதி கலந்துகொள்ளும் மக்கள் பேரணி: தொழிற்சங்க தேசிய மாநாடு

தேசிய தொழிற்சங்க மையத்தின் (NTUC) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ‘தொழிற்சங்க தேசிய மாநாடு’ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
“வேலை செய்வோம் – நாட்டை உருவாக்குவோம்: உழைக்கும் மக்களின் அதிகாரத்தைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் ‘எங்கள் அரசாங்கம்’ என்ற கருத்தை முன்னிறுத்தி நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில், அரசு, அரை அரசு, தனியார் மற்றும் தோட்டத் துறை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்க தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



