News

“அரச சேவை மிகவும் சிரமத்துடனேயே இயங்குகிறது.. இருப்பவர்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்” – அமைச்சர் லால்காந்த

தற்போது அரச சேவையின் பணிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (19) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“சம்பளம் தொடர்பாகப் பல பிரச்சினைகள் உள்ளன. அரச சேவை உண்மையில் மிகவும் சிரமத்துடனேயே இயங்கி வருகிறது. இருப்பவர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுகிறது. பொறியியல் துறையிலும் பாரிய பிரச்சினை நிலவுகிறது. இதனை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்க்க முடியாது. தனித்தனியாகத் தீர்வுகளைக் காண்போம் எனக் கூறி அரச சேவையில் கைவைத்தால், முழு அரச சேவையும் பாரிய குழப்பத்திற்குள் தள்ளப்படும்.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் தமது முன்மொழிவுகளை சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களிடமும் நாம் கேட்டுக்கொள்கிறோம். அதன் ஊடாகவே எம்மால் இதற்கு நிரந்தரமானதும், விஞ்ஞானபூர்வமானதுமான ஒரு தீர்வைக் காண முடியும்.”

#HiruNews #HiruNewsLK #TruthAtAllCosts

Recent Articles

Back to top button