News
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சீன ஜனாதிபதியும் நானும் ஆர்வம் காட்டுகிறோம் ; ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்றும் சீன ஜனாதிபதி ஷியும் தானும் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய ட்ரம்ப், “நாங்கள் இருவரும் இதில் உடன்படுகிறோம்” என்று கூறினார்.
இதற்கு சீன ஜனாதிபதி உடனடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், இந்த முக்கியமான கடல் பாதையைத் திறந்து வைப்பதில் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
அதேவேளையில், தங்களுக்கு அணு ஆயுதங்களை உருவாக்கும் விருப்பமோ அல்லது திட்டமோ இல்லை என்று ஈரானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது



