News

இன்று நாடெங்கும் எங்களால் முடியும் என்றே கூறுகிறார்கள்.. வரவிருக்கும் தேர்தலில் எங்களுக்கு 158 க்கும் அதிகமான இடங்களைத் தருவார்கள்..

தற்போதைய அரசாங்கம் எவராலும் எளிதில் கவிழ்க்கக்கூடிய ஆட்சி அல்ல என்றும், ஒரு அரசாங்கம் கவிழக்கூடிய அனைத்து ஓட்டைகளையும் வழிமுறைகளையும் அடைத்து மிகவும் உறுதியான அடித்தளத்தில் தற்போதைய ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட தேசிய சொத்துக்களை விற்றுக் கடன்களை அடைப்பது ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மற்றும் முன்னர் இருந்த ஆட்சியாளர்களின் அரசியல் வழிமுறையாக இருந்தது எனப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கங்கள் அந்தத் தோல்வியடைந்த கொள்கைகளைப் பின்பற்றி நாட்டைப் பொருளாதாரப் பள்ளத்தாக்கிற்குள் தள்ளின என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:

Recent Articles

Back to top button