News

சிங்கப்பூரிலிருந்து பெட்ரோல் 199 ரூபாய்க்கும் டீசல் 260 ரூபாய்க்கும் டீசல் இலங்கைக்கு ஏற்றப் படுவதாக சம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ள நிலையில் இன்று சிங்கப்பூர் பெட்ரோல் நிரப்பு நிலையங்களிலேயே லீட்டர் பெட்ரோல் (இலங்கை ரூபாவில்) 912 க்கும் டீசல் 1040 க்கும் விற்கப்படுகிறது… 


சில செல்வந்தர்களை மாத்திரம் பணக்காரர்களாக்கும் அநுர குமார திசாநாயக்கவின் கொள்கைகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் கொடூரமான அடக்குமுறைக்கு எதிராகவும் பயமின்றி எழுந்து நிற்பதற்கு நாம் மக்களுக்கு துணை நிற்போம் என பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்.



மக்கள் சார்ந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்



சிங்கப்பூரிலிருந்து பெட்ரோல் 199 ரூபாய்க்கே ஏற்றப்படுகின்றது. இங்கே 424 ரூபாய். 260 ரூபாய்க்கு டீசல் ஏற்றப்படுகின்றது இங்கே 397 ரூபாய். யாருடைய வரிகள் இவை?



அதேபோல் எமது சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 180 ரூபாய்க்கு எண்ணெய் கொண்டு வரப்படுகின்றது.



எவ்வளவுக்கு விற்கிறார்கள்? பெருமையாகச் சொல்கிறார்கள் நாம் இவ்வளவு இலாபம் ஈட்டியுள்ளோம் அவ்வளவு இலாபம் ஈட்டியுள்ளோம் என்று. வரி செலுத்துவதில்லை.



அதாவது நிறுவனம் வரி செலுத்துவதில்லை. ஆனால் மக்களுக்கு அநியாயமான வரிகளை விதிக்கிறார்கள்.



எனவே இந்தப் பணவீக்கம் மற்றும் ஏனைய காரணங்களுடன் எமது மக்கள் அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள்.



கட்சி நிற பேதமின்றி இந்நாட்டின் உழைக்கும் மக்கள் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் மருந்துத் தட்டுப்பாட்டிற்கு எதிராகவும் வீதிக்கு இறங்குவது வெகுதூரத்தில் இல்லை என தெரிவித்தார்..

இந்நிலையில் இலங்கைக்கு எரிபொருளை ஏற்றும் சிங்கப்பூரில்…

சிங்கப்பூரிலிருந்து பெட்ரோல் 199 ரூபாய்க்கும் டீசல் 260 ரூபாய்க்கும் டீசல் இலங்கைக்கு ஏற்றப் படுவதாக சம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ள நிலையில் இன்று சிங்கப்பூர் பெட்ரோல் நிரப்பு நிலையங்களிலேயே லீட்டர் பெட்ரோல் (இலங்கை ரூபாவில்) 912 க்கும் டீசல் 1040 க்கும் விற்கப்படுகிறது… 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button