தன்னுடன் பழகிய பெண்ணை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற நபர், காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த சம்பவம் பதிவு

எப்பாவல, மஹாஇலுப்பள்ளம பகுதியில் 45 வயதுடைய பெண்ணொருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர், அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்லும்போது காட்டு யானை தாக்கியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.
சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட நிதித் தகராறைத் தொடர்ந்து, நேற்று (27) அதிகாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
.
உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகிய சந்தேகநபர், அவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
.
அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், காட்டு யானை தாக்குதலுக்கு எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.
மேலும், சந்தேகநபர் நஞ்சருந்தியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
.
உயிரிழந்த பெண் மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபரின் அடையாளம் அல்லது வயது தொடர்பான விபரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.
.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



