News

தென் கொரியாவில்  உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் விபரங்களும் வெளியிடப் பட்டன 😥 🇰🇷 🇱🇰

தென் கொரியாவில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கையர்களின் விபரங்களை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகம் அடையாளம் கண்டுள்ளது.
.
உயிரிழந்தவர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்:
.
* கொடகவெல, ரன்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன.
.
* வலப்பனை, ஹல்கிரன்ஓயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன்.
.
தென் கொரியாவின் ஹ்வாசியோங்-சி, ஜங்கன்-மியோன் பகுதியில் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
.
உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, அவர்களது குடும்பத்தினர், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட கொரிய அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
.
மேலும், சடலங்களை நாட்டுக்கு அனுப்பும் பணிகளை இலகுபடுத்துவதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட தென் கொரியாவில் வசிக்கும் இரண்டு இலங்கையர்களுடனும் தூதரகம் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button