News

ரோகிங்ய முஸ்லிம்களில் கைதான 12 நபர்களும் விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவு பகுதிக்கு அனுப்பி வைப்பு

கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோகிங்ய  முஸ்லிம்  மக்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாதிகளை ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.கடந்த வருடம் 31ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் அவர்களை 14 நாட்கள் விளக்கமறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

எனினும் இன்று அவர்கள் மீதான குற்றச்சாட்டை சிஐடியினர் வாபஸ் பெற்ற நிலையில் அவர்களும் அந்த 12 நபர்களும் விசா இன்றி உள்ளே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முல்லைதீவில் வைக்கப்பட்டிருந்த 103 நபர்களுடன் இணைக்கும் நோக்கில் திருகோணமலையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களையும் முல்லை தீவு நோக்கி பொலிஸார் அழைத்து சென்று உள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button