News

கல்முனை பிராந்தியத்தில் விழிப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு  மக்களுக்கு அறிவுறுத்தல்: பிராந்திய பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன்

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பெருமழை காரணமாக கல்முனை பிராந்தியத்தில் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து அதன் வான் கதவுகளும் திறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சீரற்ற காலநிலை தொடருமானால் பாரியதொரு வெள்ள அனர்த்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிராந்திய மக்களை கேட்டுள்ளார்.

குறிப்பாக அனர்த்த நிலைமைகளின் போது அரசாங்கத்தினதும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வானிலை அவதான நிலையம் ஆகியவற்றினதும் அறிவுறுத்தல்களை பின்பற்றி அனர்த்த நிலைமைகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்றுமாறும் பிராந்திய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இக்காலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளாகுவோர் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பிராந்திய மக்களிடம் கேட்டுக்கொள்கிறார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button