News

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்: சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹரீசுக்கு எதிராக வழக்கு!



நூருல் ஹுதா உமர்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்ற முஸ்லிம் பெண்களின் ஆடை அணியும் உரிமை தொடர்பான விவகாரத்தில், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிட்டு அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22) மட்டக்களப்பு நீதிவான் அண்ணத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

வழக்கில் நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளை ஒன்றை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, வழக்கு விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான இந்த விவகாரம், தனிநபர் கருத்து வெளியீட்டைத் தாண்டி, சிறுபான்மை சமூகங்களின் மத மற்றும் பண்பாட்டு உரிமைகள் தொடர்பான பரந்த சமூக விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடையே கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button