News

தேங்காய்ப் பால், தேங்காய் சம்பல் போன்றவற்றால் தேங்காய் வீண்விரயமாகிறது..

தேங்காய்ப்பால், தேங்காய் சம்பல் போன்றவற்றால் தேங்காய் வீணாகிறது என கைத்தொழில் பிரதி அமைச்ச சதுரங்க அபேசிங்க கூறினார்.

தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய் எண்ணெய் கைத்தொழிலுக்கான தேங்காய் இறக்குமதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கைத்தொழில் பிரதி அமைச்சர் திரு.சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

அதன்படி தற்போது தேவையான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் வீடுகளில் தேங்காய் நுகர்வு மிகவும் வீண் விரயமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேங்காய்ப்பால், தேங்காய் சம்பல் போன்றவற்றால் தேங்காய் வீணாகிறது . இந்த இரண்டு செயல்முறைகளிலும் நிறைய தேங்காய் வீணாகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேங்காய் பால் மற்றும் தேங்காய் சம்பல் செய்வதால் தேங்காய் வீண் விரயமாவதாக கூறிய அவர் தேங்காய் தண்ணீர் மற்றும் சிரட்டை ஏற்றுமதி பொருட்கள் என கூறினார்.

அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button