News

லிவிங் டு கெதர் விவாகரம் – சிரமதானத்திற்கு வந்த பெண்ணின் தாத்தா, மண்வெட்டியால் தாக்கியதில்காதலனின் தந்தை உயிரிழப்பு

ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிழந்துள்ளார்.



சம்பவ தினம் பிரதேசத்திலுள்ள தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதி கிராம சேவையாளர்ரின் தலைமையில் இப்பகுதியில் உள்ள பிரதான வீதியொன்றை “க்ளீன் இலங்கை” வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.



சுமார் 100 பேர் கலந்து கொண்ட இச்சிரமதானத்தில் சிங்கள பெண் ஒருவரை காதலித்த தோட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் தந்தையும் சிங்கள பெண்ணின் தாத்தாவும் கலந்து கொண்டுள்ளனர் . இவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியது. இதன் போது பெண்ணின் தாத்தா சிரமதான பணிக்கு கொண்டு வந்த மண் வெட்டியால் தலையிலேயே தாக்கியதில் தமிழ் இளைஞனின் தந்தை தலையில் பலத்த காயமேற்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இந்த காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் பெண்ணின் தாத்தா மட்டுமே நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.



பிரேத பரிசோதனைக்காக சடலம் காலத்தை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இது இவ்வாறிருக்க திருமணம் முடிக்காமலே இந்த
காதல் ஜோடி காதலன் வீட்டில் பல மாதங்களாக தங்கி இருப்பதாகும் பெண்ணின் தாத்தா இது குறித்து வினவிய போதே இந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button