வீடுகள் சேதமாக்கப்பட்டதற்கு இவ்வளவு பெரிய தொகை இழப்பீடு கிடைத்திருக்கும் என தெரிந்திருந்தால், ஏனைய அரசியல் வாதிகள், தங்களது வீட்டையும் பற்ற வைத்திருக்கலாமே என நிச்சயம் ஏங்கியிருப்பார்கள்.

- மிஸ்பாஹ் உல் ஹக்
கோத்தாவின் ஆட்சி காலத்தில் அரகலய போராட்டகாரர்களை ராஜபக்ஸ சார்பு அணியினர் தாக்கியதால் ஏற்பட்ட குழப்பத்தின் போது பல அரசியல் வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டிருந்தன. இதற்கு நஸ்டயீடு வழங்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது, ஏனைய அரசியல் வாதிகள், தங்களது வீட்டையும் பற்ற வைத்திருக்கலாமே என நிச்சயம் ஏங்கிருப்பார்கள். அந்தளவு பணம் கொட்டப்பட்டுள்ளது.
சுனாமியால் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வீடுகளின் அளவை பார்த்து யாருக்கும் நஸ்டயீடு வழங்கப்பட்டுள்ளதா? அப்படி யாருக்கும் வழங்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவாக ஒரு தொகை வழங்கப்படும். அது அவர்கள் குறித்த துயரில் இருந்து மீள்வாதற்கான ஆரம்ப தொகையாக இருக்குமே தவிர, முழுமையாக அழிவடைந்த தொகையாக ஒருபோதும் இருக்காது. ஏன் இந்த அரசியல் வாதிகளுக்கு மாத்திரம் இந்தளவு பெருந் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?
இந்த நிவாரணத்தை குறைத்து, ரணிலின் காலத்தில் அழிவடைந்த விவசாயிகளுக்கு போதுமான அளவு நிவாரணங்களை வழங்கியிருக்கலாம். மீனவர்களுக்கு எரிபொருள் மாணியத்தை வழங்கியிருக்கலாம். இதனால் எமது நாடு அழிவடைந்திருந்தால், நல்லது செய்து நாசமாகிவிட்டோம் என்றாவது மனம் ஆறியிருக்கும்.
எமது வரியில் ஏன் இந்த அரசியல் வாதிகள் வயிறு வளர்க்க வேண்டும் ? அதற்கு சாதாரண மக்களாகிய நாம் ஏன் விலை கொடுக்க வேண்டும். இந்த கலாச்சாரத்தை இன்னும் ஒழிக்காது, எமது நாடு ஒரு போதும் முன்னேறாது. தியாகங்களை செய்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு அணியினர் நாட்டை பொறுப்பேற்றுள்ளனர். அது எமக்கு வெளிப்படையாகவே தெரிகிறது. அவர்களின் தியாகங்கள் நிச்சயம் வீண் போகாது என நம்புவோம். தியாகங்கள் ஒருபோதும் வீண் போவதுமில்லை.
https://www.facebook.com/share/p/1588gudbkr/



