News

நான் தினமும் இரவு 09.00 மணி வரை அமைச்சில் வேலை செய்கிறேன்..- சதுரங்க

வாரத்தின் ஒவ்வொரு நாளும் இரவு 8-9 மணி வரை தான் அமைச்சில் இருப்பதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு முன்னர் அமைச்சர்கள் இவ்வாறு செயற்படவில்லை எனவும் சில சமயங்களில் அமைச்சரின் வீட்டிற்கு சென்று கடிதங்களில் கையொப்பமிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது பிறந்த நாளான 22ஆம் திகதி அமைச்சில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றி நாட்டின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டை முதலீடு செய்வதற்கு அரச ஊழியர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Recent Articles

Back to top button