நாட்டில் ஏற்பட்ட முழு அனர்த்தத்திற்கும் அரசாங்கத்தினுடைய அசம்பந்த போக்கே முழுக்காரணம் – அவர்கள் தகுந்த நேரத்திலேயே தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் ; இராதாகிருஷ்ணன் M P

இலங்கையில் நடந்த இந்த முழு அனர்த்தம் அரசாங்கத்தின் அசமந்தபோக்கு – இராதாகிருஷ்ணன் எம் .பி
சபைக்கு தலைமை தாங்குகின்ற பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டிலே ஏற்படுத்தி இருக்கின்ற அனர்த்தத்தின் காரணமாக முழு நாடுமே இன்று அதிர்ச்சி அடைத்திருக்கின்றது. அதே நேரத்திலே மிகவும் மோசமான சூழ்நிலையிலே இருந்த இந்த நேரத்திலே பல குடும்பங்கள் நிற்கதியாகி பலபேர் உயிரிந்திருக்கின்றார்கள்.
ஆகவே அவர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விசேஷமாக நுவரலிய மாவட்டம், நாங்கள் வசிக்கின்ற மாவட்டம், அதேபோல் பதுலை, கண்டி போன்ற மாவட்டங்களிலே வசிக்கின்ற மக்கள், எங்களுடைய மாகாணத்திலே இருக்கின்ற மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இந்த நேரத்திலே சொல்லன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றதே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையிலே நூரெலிய மாவட்டத்திலே ஏற்பட்ட அனர்த்தத்திலே பின்வரும் விஷயங்களை நான் சொல்ல வருகின்றேன். நுவரலிய மாவட்டத்திலே இதுவரைக்கும் 38 முகாம்கள் இருக்கின்றன. நோர் முகாமிலே 34, நில்தண்டாஹின்னா 63, வளப்பனையில் 36, அங்குராகத்தையிலே 35, கொத்மலையிலே 48, தளவாக்கலையிலே 29 போன்ற பகுதிகளிலே மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மொத்தமாக நூரேலியாவிலே 123 முகாம்கள் இருக்கின்றன. 6959 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 24681 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மரணங்களின் எண்ணிக்கை 89. காணாமல் போனவர்களுடைய எண்ணிக்கை 73.
ஆகவே, இந்த நேரத்திலே இந்த மக்களுக்கு எந்த வகையான உதவிகளை செய்யலாம் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த முழு அனர்த்தம் அரசாங்கத்தினுடைய அசம்பந்த போக்கு என்று நாங்கள் சொல்லலாம். அவர்கள் தகுந்த நேரத்திலே தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம், குறைத்திருக்கலாம் என்பதே எங்களுடைய கருத்தாக இருக்கின்றது.
ஆகவேதான் விசேஷமாக, நான் நினைக்கிறேனே, பதுளை அமைச்சர் இங்கே இருக்கின்ற காரணத்தினால் அவர்ட்ட சொல்ல வேண்டும், பதுளை பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. கட்டி எழுப்புவதற்கு இன்னும் எத்தனை வருஷங்கள் போகுமே எங்களுக்கு தெரியாது.
இருந்தாலும் கூட நாங்கள் அந்த மக்களுக்கு உடனடியான தேவைகளை இந்த அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அந்த வகையிலே இந்த அரசாங்கத்தினுடைய கொள்கைப்படி ஒரு கிராம சேவகர்க்கு 50,000 கொடுப்பதாகவும், ஏ ஜிஏக்கு 50 லட்சம் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். இதுவரைக்கும் அந்த காசு போய் சேரவில்லை.
உதாரணமாக நான் சொல்லுகின்றேன், நான் 29ஆம் தேதி தான் இங்கிருந்து போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. கந்தப்பளையிலே 850 மக்கள் இருக்கின்றார்கள் இந்த கேம்ப்ல. அதுவரைக்கும் நாங்கள் போக வரைக்கும் எந்தவிதமான உதவி உபகரணங்கள் அங்க கிடைக்கவில்லை. அங்க உள்ள வர்த்தக பிரமுகர்கள் தான் அதை செய்தார்கள்.
நான் அப்பொழுது அங்க உள்ள கிராமசேகர் கிட்ட கேட்கும் பொழுது அவர் சொன்னார், “எங்களுக்கு இன்னும் காசு அனுப்பவில்லை. சத்தோசல வாங்க சொல்றாங்க. சத்தோச போனா சாமான் இல்லை.
சத்தோஷல ஏன்னா ரோடு எல்லாம் போக முடியாது. சத்தம் சாமான் இல்ல. இருக்கிற சாமான இருக்கறவங்க வாங்கிட்டு போயிருக்காங்க.” ஆகவே இந்த சூழ்நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது என்பதை மிகவும் மனம் நொந்து அவர்கள் சொன்னதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
விசேஷமாக நூரேலியா பகுதியிலே எங்க பகுதியிலே மூன்றாக பிரிக்கலாம் அவர்களுடைய வருமானத்தை பொறுத்தவிரையில. ஒன்று தோட்டத்தொழில் (பிளான்டேஷன்), இரண்டாவது விவசாயம், மூணாவது டூரிசம். நான் இந்த ஒவ்வொரு சப்ஜெக்ட்டாக நான் உங்களுக்கு சொல்லி வருகின்றேன்.
முதலாவதாக பிளாண்டேஷன் கம்யூனிட்டி எடுத்துக்கிட்டா, நான் நினைக்கிறேன் அங்கு அதிகமான தோட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கந்தப்பலைக்கும் ராகலைக்கும் இடையிலே போக்குவரத்து பாதைகள் கிடையாது. பாதை முழுக்க வந்திருக்கின்றது. அதேபோல கந்தப்பலையிலே ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இறந்திருக்கின்றார்கள்.
இன்னும் பொடி எடுக்கப்படவில்லை. டொனால்ட் என்ற ஆசிரியருடைய குடும்பம் அப்படியே நிற்கதியாகிவிட்டது. ஆகவே இந்த தோட்ட தொழிலாளர்களுக்கு இப்பொழுது கேம்ப்ல இருக்கறவங்களுக்கு சொல்லுகிறார்களா, “நீங்க வீட்டுக்கு போங்க. அங்க உங்களுக்கு நாங்க திரும்ப எல்லா வசதியும் செய்து தாரோம்.” ஆனா இவர்கள் அனர்த்தம் என்ற காரணத்தினால் தான் கேம்புக்கு கொண்டுவந்தப்பட்டிருக்காங்க. கேம்ப்ல இருந்து திரும்ப அங்க போய் இருங்க, நாங்க உங்களுக்கு அப்பதான் வீடு கட்டிக் கொடுப்போம்னா, அது எந்த அளவுல எதார்த்தம்ங்கறது எனக்கு தெரியல.



