News
எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை நான் ஒரு போதும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் ; ட்ரம்ப் அறிவிப்பு

“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். ஈரான் அரசுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “இந்த நடவடிக்கை மக்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று கூறினார்.



