News
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் பிள்ளையானை பிணையில் விடுவிக்க விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல், பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (20) முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவிடம், அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையிலேயே குறித்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



