News
விட்ஸ் காரை 1.2 மில்லியன் ரூபாவிற்கு விற்கலாம் என நான் அறிக்கை விட்டதை சஜித் நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன்… அதை நிரூபிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ராஜினாமா செய்ய வேண்டும் என பிரதி அமைச்சர் Open சேலஞ்ச்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விட்ஸ் (Vitz) கார் ஒன்று 1.2 மில்லியன் ரூபாவிற்கு விற்கப்பட்டதாகத் தான் கூறியதாகத் தெரிவித்த குற்றச்சாட்டுகளை பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (20) வன்மையாக மறுத்தார்.
“விட்ஸ் கார் ஒன்று 1.2 மில்லியன் ரூபாவிற்கு விற்கப்படுவதாக நான் அறிக்கை விட்டதை நிரூபிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் ராஜினாமா செய்கிறேன்.
அவரால் அதை நிரூபிக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று ஹேவகே சபையில் உரையாற்றும்போது கூறினார்.
எதிர்க்கட்சியினர் பொய்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டிய அவர், அவ்வாறான எந்தவொரு கூற்றையும் தான் கூறவில்லை என்றும் வலியுறுத்தினார்.



