இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய அவசரத் தேவை இல்லை – 159 கால் துடைக்கும் கார்பெட்களான அரசாங்கத்துடன் மோதுவது ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயமல்ல ; ராஜித்த

159 கால் மிதிகளுடன் மோதுவது பெரிய விஷயமல்ல – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு
மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு இணைந்த எதிர்க்கட்சியாக தலைமைத்துவம் வழங்குவது இடம்பெற்று வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய அவசரத் தேவை இல்லாவிட்டாலும், அரசாங்கத்தின் சர்வாதிகார வேலைத்திட்டத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதே தமது ஒரே நோக்கம் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் மோதுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றும், தாங்கள் மிதியடிகள் என அவர்களே அறிவித்துள்ள நிலையில், 159 மிதியடிகளுடன் மோதுவது பெரிய பிரச்சினையல்ல என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் மற்றும் உயிரழப்புகள் தொடர்பில் நீதி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், வெறுமனே குற்றத்தை ஒப்புக்கொள்வது மட்டும் போதுமானதல்ல என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.



