News

மாஷா அல்லாஹ்; கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்

மாஷா அல்லாஹ்; கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களுடனான சந்திப்பு இன்று (13) வியாழக்கிழமை இரவு கல்முனையில் இடம்பெற்றது

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலை விடயம் தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் உட்பட உரிய தரப்பினருடன் தான் உடனடியாக பேசி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தற்போது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி அங்கே வேலைசெய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் சரியான பின்னர் சிலர் சந்தர்ப்பவாத நிலையினை கொண்டு ஜீரணிக்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றும் செய்யவில்லை என பேஸ்புக்கில் பெரிதாக எழுதி வங்குரோத்து அரசியல் செய்கின்றனர் என அவர் மேலும் கூறினார்.

எம்.என்.எம். அப்ராஸ்

Recent Articles

Back to top button